மள்ளர் சமுதாயம்

மள்ளர் அல்லது பள்ளர் எனப்படும் சமுதாயத்தினர் தமிழகத்தில் பள்ளர், காலாடி, மூப்பன், குடும்பன், பன்னாடி,தேவேந்திரக் குலத்தான் எனும் வேறு சில பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் தங்களை தேவேந்திரன் வழி வந்தவர்கள் என்கிறார்கள்.எனவே தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப் படுகின்றார்கள்.இவர்கள் முழுமையாக வேளாண்மைத் தொழில்களையே செய்து வந்தனர். இவர்கள் பொருளாதாரத்திலும் சமூக நிலையிலும் வீழ்ச்சியுற்றிருந்ததால் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு பட்டியல் சாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். மிகவும் வீழ்ச்சியுற்றிருந்த நிலையில் இருந்த இந்த சமுதாயத்தினர் தற்போது கல்விஅரசியல்பொருளாதாரம்போன்றவைகளில் முன்னேற்றமடைந்து பல முக்கியப் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இந்திய அரசின் அமைச்சரவையிலும், தமிழ்நாடு அரசின் அமைச்சரவையிலும் பலர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் வீழ்த்தப்பட்ட தமிழ்க்குடிகளில் வெகுவேகமாக முன்னேற்றமடைந்து வரும் ஒரு சில சமூகங்களில் இந்த சமுதாயம் முன்னிலையில் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.





நெல் நாகரிகம்

உலகின் நாகரிகங்களை வகைப்படுத்தும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாகரிகத்தை “நெல் நாகரிகம்” என்று கூறுகிறார்கள். இந்த நெல் நாகரிகம் தோன்றியது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்திலே தான். தமிழகத்தில் இந்த நாகரிகம் மள்ளர் நாகரிகம் எனப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இந்த நாகரிகத்தின் தோற்றத்தையும் இந்த நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் பற்றியும் அதன் “பண்பாடுத் தலைவர்கள்” பற்றியும் அந்தப் பண்பாடு பற்றியும் விரிவாகவும் பெருமையுடன் கூறுகின்றன.
"'தேவேந்திரப் பள்ளரில்' வெள்ளானன வேந்தன், மிக விருது பெற்றவன் சேத்துக்கால் சென்னன், சென்னல் முடி காவலன், தேவேந்திர வரபுத்திரன், மண்வெட்டி கொண்டு மலையைக் கடைந்த கண்ணன், வெள்ளானனக் கொடி படைத்தவன், வெள்ளைக்குடை, முத்துக்குடை, பவளக்குடை, பஞ்சவர்ணக்குடை, முகில் கொடி, புலிக்கொடி, அலகுக்கொடி படைத்தவன், தெய்வப் பொன்முடி தேவேந்திரனுக்குக் கொடுத்து இருகால் சிலம்பு வெகு விருது பெற்றவன் குருணிகுர 'தேவேந்திர பள்ளர்'"
காமாட்சியம்மன் கோயில் செப்புப்பட்டயம்



                                                                                        நன்றி விக்கிபீடியா